×

தாணிக்கோட்டகத்தில் 3ம்தேதி இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்த சாலை மறியல் ஒத்தி வைப்பு தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வேதாரண்யம், டிச.1: வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்த பணியாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்காமல் அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை கண்டித்தும், தாணிக்கோட்டகம் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் பத்து நாட்களுக்கு ஒருமுறை வழங்குவதை கைவிட்டு நாள்தோறும் வழங்க வேண்டும், இப்பகுதியில் கஜா புயலின்போது 350 குடும்பங்களுக்கு சொந்தமான கழிப்பறைகள் சேதமானது. அதனை அரசு உடனடியாக கட்டிக் கொடுக்க வேண்டும். தாணிக்கோட்டகம் சின்னதேவன்காட்டில் 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வந்த சந்தைக்குளம் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம் தாசில்தார் சண்முகம் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாசில்தார் சண்முகம் அனைத்து கோரிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தின் பேரில் சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. உடன்பாடு ஏற்பட்டதையொட்டி வருகிற 3ம் தேதி நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags : Dasillar ,Indian Communist Party ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...