×

நிர்வாகம், சட்டம் ஒழுங்கில் குளறுபடி வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஊட்டிக்கு இடமாற்றம்

வெள்ளகோவில், டிச.1: வெள்ளகோவில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜெயபால், இருந்து வந்தார். இவர் லாட்டரி, சட்ட விரோத மது விற்பனை என அனைத்திற்க்கும் தாராளம் காட்டி வருவதாக ஏராளமான புகார்கள் வந்தபடி இருந்தன. கடந்த மாதத்தில் முத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்த்து ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மௌனம் காத்து வந்தார். இது குறித்து பல புகார்கள் சென்றது. ஆனால் கஞ்சா விற்பவரை இதுவரை கைது செய்யவில்லை. சமூக வலைதளங்களில் பலர் நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் கிராவல் மண் விற்பனையாளர்கள் பலரும் அனுமதியின்றி மண் எடுத்து சென்ற லாரிகளுக்கு மாமூல் பெற்றுக்கொண்டு வந்தார். இந்த லாரிகளை தனிப்பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். ஆனால் அதனை விடுவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இது குறித்தும் புகார் எஸ்பி.க்கு சென்றது.
கடந்த வாரத்தில் சோதனைச்சாவடியில் வசூலில் ஈடுபட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்ர். இது குறித்து எஸ்பி. தனிபிரிவு போலீசார், மேலிடத்திற்கு புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் எஸ்பி. உத்தரவில் உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டரை வெள்ளகோவிலில் இருந்து விடுவிக்க எஸ்பி. திஷாமிட்டல் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று ஜெயபால் மாற்றம் செய்யப்பட்டார். ஊட்டியில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மனோகரன் வெள்ளகோவிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Inspector Ooty ,Wellago ,
× RELATED வெள்ளகோவில் அருகே கற்களை கடத்திய லாரி பறிமுதல்