×

தேனியில் தள்ளுவண்டியில் போர்வை விற்கும் ம.பி இளைஞர்கள்

தேனி, டிச. 1: தேனிநகரில் தள்ளுவண்டிகளில் மத்தியபிரதேசத்தை இளைஞர்கள் போர்வைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. தேனி நகரில் நாளுக்கு நாள் வடமாநில இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. வியாபாரத்திற்காக வந்த வடமாநிலத்தவர்களுக்காக தேனியில் ஒரு தெரு நிரம்ப வடமாநிலத்தவர்களே இருக்கும் அளவிற்கு வடமாநிலத்தவர்களின் குடியிருப்பு அதிகரித்துள்ளது. தம் டீ விற்பனையில் ஆரம்பித்த விற்பனை தேனியில் சமீபகாலமாக வீட்டு உபயோக சாமான்கள், பேன்சி சாமான்கள், காலணிகள், மின்சாதன பொருள்கள், மரவேலைப்பாடு சாமான்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் தேனி நகரில் வடமாநிலத்தவர்களின் கூட்டம் எங்கு பார்த்தாலும் நிறைந்துள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி 14 நாட்களாகிவிட்டதால் கடும்பனி வீச தொடங்கியுள்ளது.

இதனால் தேனி மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் அதிகாலை வரை கடும்பனி நிலவி வருகிறது. இதனால் குளிரை தாங்கக்கூடியபேர்வை, ஸ்வெட்டர், பெட்சீட் போன்றவற்றை மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் கையால் தள்ளும் தள்ளுவண்டிகளில் தேனி நகரில் கம்பம் ரோடு, மதுரை ரோடு, பெரியகுளம் ரோடுகளிலும், நகரின் அனைத்து பகுதிக்குள்ளும் கும்பல்,கும்பலாக சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து வடமாநில இளைஞர்கள் கூறியதாவது : பனி காலம் துவங்கி விட்டதால் போர்வை நல்லபடியாக விற்பனையாகிறது. போர்வை ஒன்று ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு ஒருவருக்கு 50 முதல் 100 போர்வைகள் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

Tags : youths ,Theni ,
× RELATED கோயில் அருகே தனியாக தூங்கி...