×

தேனி மாவட்ட டிஆர்ஓ, சப்-கலெக்டர் மாற்றம்

தேனி, டிச. 1: தேனிமாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் உத்தமபாளையம் சப்- கலெக்டர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வரும் கந்தசாமி, திண்டுக்கல் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணைய மாவட்ட வருவாய் அலுவலராகவும், உத்தமபாளையம் சப்-கலெக்டராக பணிபுரிந்து வரும் வைத்தியநாதன் பொள்ளாச்சி சப்-கலெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த காலியிடங்களுக்கு புதிய அதிகாரிகள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

Tags : TRO ,Theni District ,Sub-Collector Transfer ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...