கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல்

உடுமலை, டிச. 1:உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி மற்றும் மீன்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இனி, இதுபோன்ற பழைய மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags :
× RELATED பூவிருந்தவல்லி அருகே கோயில்...