இடியும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க கோரிக்கை

குன்னூர், டிச.1: குன்னூர் நகராட்சி குட்பட்டது பழைய மருத்துவமனை பகுதி. இந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான ராஜாஜி நகர், மாடல் ஹவுஸ், ரேலி காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பாலம் உளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பாலத்தின் அடியில் மண்அரிப்பு ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளது.  பொது மக்கள் அவ்வழியே சென்று வர கடும் அச்சமடைந்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் தினந்தோறும் அவ்வழியே நடந்து செல்வதால் எப்போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியில்உள்ள பாலத்தை பார்வையிட்டனர். இருந்த போதிலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் பாலம் இடியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர் கால அடிப்படையில் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>