இயற்கை உரம் தயாரிப்பு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ஊட்டி, டிச. 1: ஊட்டி வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சகவ்வியம், தசாகவ்வியம், மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தோட்டக்கலைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் (அட்மா) ஊட்டி வட்டாரத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பஞ்சகவ்வியம், தசாகவ்வியம், மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்துக் ெகாண்ட ேஹாப் டிரஸ்ட் சிவக்குமார், இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்தும், அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோபர்மரவிரிடி, சூடோமோனாஸ் ஆகிய உரங்களை பயிர்களுக்கு பயன்படுத்தும் முறகைள் குறித்து விளக்கினார். மேலும், தொழில்நுட்ப உதவி மேலாளர் அபினேஷ், அட்மா திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து விளக்கி கூறினார்.

Tags :
× RELATED வறட்சி எதிரொலி வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்