×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு

ஊட்டி, டிச. 1: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக., சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நேர் காணல் நடக்கிறது. நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்பமனு அளித்த திமுக., வினரிடம் வரும் 3, 4, 5 ஆகிய மூன்று நாட்கள் ஊட்டியில் உள்ள மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள திமுக.,வினர் அனைவரும் தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். 3ம் தேதி செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு ஊட்டி நகரத்திற்கும், 12 மணிக்கு குன்னூர் நகரம், மதியம் 1 மணிக்கு கூடலூர் நகரம் மற்றும் 2 மணிக்கு நெல்லியாளம் நகரத்திற்குட்பட்டவர்களுக்கு நேர் காணல் நடக்கிறது.


4ம் தேதி புதன் கிழமை காலை 11 மணிக்கு ஊட்டி வடக்கு ஒன்றியம், 12 மணிக்கு ஊட்டி தெற்கு ஒன்றியம், 1 மணிக்கு மேலூர் ஒன்றியம், 2 மணிக்கு குன்னூர் ஒன்றியங்களுக்கு உட்பட்டவர்களுக்கு நேர் காணல் நடக்கிறது. 5ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கூடலூர் ஒன்றியம், 12 மணிக்கு பந்தலூர் ஒன்றியம், மதியம் 1 மணிக்கு கோத்தகிரி ஒன்றியம், 2 மணிக்கு கீழ்கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது. மேலும், நேர்காணல் நடைப்பெறும்போது, தொடர்புடைய நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அந்தந்த நகர, ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்திலுள்ள தலைமை நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.  விருப்பமனு அளித்து நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் பரிந்துரையாளர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு முபாரக் கூறியுள்ளார்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...