×

ஊட்டி நகரில் குதிரைகள் தொல்லை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

ஊட்டி, டிச. 1: ஊட்டி நகரில் மீண்டும் குதிரை உட்பட கால்நடைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  ஊட்டி நகரில் வாகனங்கள் அதிகம் செல்லும் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் குதிரைகள் மற்றும் கால்நடைகளின் தொல்லை அதிகமாக இருந்தது. வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது மட்டுமின்றி, பொதுமக்களையும் சில நேரங்களில் தாக்குகிறது.இந்நிலையில், கால்நடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று நகராட்சி நிர்வாகம் ஊட்டி நகரில் குதிரைகள் மற்றும் கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்டது. அதேபோல், அவைகளுக்கு லைசன்சும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை கால்நடை வளர்ப்பாளர்கள் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான சாலைகளில் குதிரைகள் மற்றும் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக பூங்கா செல்லும் சாலையில் அதிகளவிலான குதிரைகள் வலம் வருகின்றன. மேலும், நடைபாதைகளில் நின்று கொண்டு பொதுமக்கள் நடந்துச் செல்ல இடையூறாகவும் உள்ளது. சாலையில் வலம் வரும் குதிரை மற்றும் கால்நடைகளால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Ooty ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்