மஞ்சூர் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

மஞ்சூர், டிச.1:  மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மஞ்சூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப் பணி திட்டத்தின் சார்பில் உலக  எய்ட்ஸ் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர்  ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியார்கள் மோகன், மணி, டெய்ஸிஒபிலியா,  என்.சி.சி அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். உதவி  தலைமையாசிரியர் சாந்தி வரவேற்றார். இதை தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு  பேரணியில் உயிர்கொல்லி நோய்களான எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி நோய்களை  ஒழிப்போம், எய்ட்ஸ் நோயாளிகளை அரவணைப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை  பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள். தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட  மாவட்ட தொடர்பு அலுவலர் சசிகுமார் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி  ஏற்றுக்கொண்டனர். முன்னதாக பள்ளி மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு லோகோவான சிவப்பு ரிப்பனை போல் நின்று அசத்தினர். இதில் பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்  ராம்கி, ஆசிரியர்கள் சாமிநாதன், ராணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Stories:

>