×

கோடை சீசனுக்கு தயாராகும் பூங்காக்கள்

ஊட்டி, டிச. 1: கோடை சீசனுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ஊட்டியில் உள்ள பூங்காக்கள் தயார் செய்யும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெயிலை தாங்க முடியாமல் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். அப்போது, ஊட்டி தாவரவியல்
பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. தோட்டக்கலைத்துறை ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் முதல் மலர் நாற்றுகள் பூங்காக்களில் நடவு செய்யும். தாவரவியல் பூங்காவில் பல லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்யப்படும்.

ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகளை கவாத்து செய்து, ஏப்ரல் மாதம் ரோஜா மலர்கள் பூக்கும் வகையில் பூங்காவை தயார் செய்கின்றனர். தற்போது தாவரவியல் பூங்காவில் 7 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மைதானங்களில் புதிய மண் கொட்டப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  இதேபோன்று மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Parks ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது