×

பொள்ளாச்சி சம்பவம் குறித்த பாக்யராஜின் கருத்து பெண்களுக்கு எதிரானது இல்லை

கோவை, டிச.1:  ‘‘பொள்ளாச்சி சம்பவம் குறித்த பாக்யராஜின் கருத்து பெண்களுக்கு எதிரானது இல்லை’’ என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். சமக தலைவர் சரத்குமார் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: நல்லாட்சி நடந்து கொண்டிருக்கின்ற சூழலில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது, நாங்களும் தயாராக உள்ளோம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும். உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் வர வேண்டும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்தார்கள். பின்னர் இருவரும் பிரிந்து மக்களை கேட்காமல்  ஆட்சி அமைத்தார்கள். இது தவறு.

மக்களை கேட்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று நடக்கும் என்பதால் மக்களை கேட்டபிறகுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற சட்டத்தை கொண்டு வர வேண்டும். இருந்தாலும் மகாராஷ்டிராவில் பா.ஜ.க.விற்க்குதான் பெரும்பான்மை உள்ளது. மாவட்டங்களை பிரிப்பது நல்லதுதான். இதனால் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்கும். இது இரு சிறந்த வழிகாட்டுதலாகவும் இருக்கும்.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதை தடுக்க சிறுவயதிலிருந்தே பாலியல் கல்வி என்பது அவசியம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளுக்கு சட்டங்களை கடுமையாக்க வேண்டும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.  பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த பாக்யராஜ் கருத்து பற்றி கேட்டபோது, ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் அவர் பெண் இனத்திற்கு எதிராக கருத்து சொல்லவில்லை என்றார்.

Tags : Bhagyaraj ,incident ,women ,Pollachi ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது