×

சூலூரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பங்கள் அகற்றம்

சூலூர், டிச. 1: சூலூரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர். சூலூர் காங்கேயம்பாளையம் முதல் பாப்பம்பட்டிபிரிவு வரை சாலை விரிவாக்கப்பணி தற்போது நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தினர். இது குறித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரங்கநாதபுரம் முதல் மார்க்கெட் ரோடு வரை போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் நேற்று ஒரே நாளில் அகற்றப்பட்டன. இந்த பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து அகற்றப்பட்ட மின் கம்பங்கள் வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இப்பணி காரணமாக நேற்று சூலூர் டவுன் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Tags : Sulur ,
× RELATED ஆப்பனூர் விவசாய நிலங்களில் ஆபத்தான மின் வயர்கள், கம்பங்கள்