கொடுத்த பணத்தை கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது

கோவை, டிச.1: பொள்ளாச்சி டி.கொட்டாம்பட்யை சேர்ந்தவர் மணிவண்ணன் (47), கூலி தொழிலாளி. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (34) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடனாக பணம் வாங்கியுள்ளார். சம்பவத்தன்று அந்த பணத்தை திருப்பித்தருமாறு மணிவண்ணன் அவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர், பணத்தை தரமறுத்து மணிவண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அருகில் இருந்த சுத்தியலால் தாக்கியதுடன் அடித்து உதைத்துள்ளார். இதில், தலையில் படுகாயம் அடைந்த மணிவண்ணன், பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணிவண்ணன் அளித்த புகாரின்பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

Tags :
× RELATED மிரட்டல் விடுத்த வாலிபர் கைது