×

திருமங்கலத்தில் துவங்கியது மாநில வாள் சண்டை போட்டி

திருமங்கலம், டிச.1:  திருமங்கலத்தில் நேற்று துவங்கிய  மாநில அளவிலான வாள் சண்டை போட்டிகளில் 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான 30வது சீனியர் வாள் சண்டை போட்டிகள் துவங்கியது. தமிழ்நாடு வாள் விளையாட்டு சங்கம் சார்பில் துவங்கிய இந்த போட்டியின் துவக்க விழாவிற்கு வாள் சண்டை கழக தலைவர் ஜான் நிக்கல்ஸன் வரவேற்றார்.  தமிழக ஓலிம்பிக் சங்க தலைவர் சோலைராஜா தலைமை வகித்தார்.

அன்னைபாத்திமா கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் செல்லத்துரை, திருமங்கலம் வக்கீல் சங்க தலைவர் ராமசாமி, வாள் சங்க செயலாளர் வரதராஜன், கல்லூரி முதல்வர் வேல்மணி, டீன் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று துவங்கிய வாள் சண்டை பயிற்சியில் மதுரை, சென்னை, நெல்லை, நாமக்கல், கன்னியாகுமரி, திருச்சி,காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளில் 12பேர் தேர்வு செய்யப்பட்டு தலைநகர் டெல்லியில் வரும் 26ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான வாள் போட்டிக்கு தகுதிபெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் நடுவர்களாக கணேசன், பார்த்திபன், வேல்மணி அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் மதிப்பெண்களை வழங்கினர். வாள்சண்டை போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags : state sword fight competition ,Thirumangalam ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...