×

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது

மேட்டுப்பாளையம், டிச.1:    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10ம் தேதி முதல் பெய்து வருகிறது.இதன் காரணமாக மலைரயில் பாதையான கல்லார், அடர்லி, இல்குரோ, ரன்னிமேடு மற்றும் குன்னூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் பாதை சேதமடைந்து கடந்த 14ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் மேட்டுப்பாளைய-ஊட்டி வரை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. 16 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Mettupalayam-Ooty Mountain Railway ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்