இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை, டிச. 1: சின்னதடாகம் பவித்ரா மெடிக்கல் சென்டர் மற்றும் தி ஐ பவுண்டேசன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தியது.பவித்ரா மெடிக்கல் சென்டர் மருத்துவர் சுமதி தேவராஜன் தலைமையில் 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்காக சின்னத்தடாகத்தில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாத இறுதியிலும் வெள்ளிக்கிழமை தி ஐ பவுண்டேசனுடன் இணைந்து சிறந்த கண் மருத்துவர்களால் இலவச கண்சிகிச்சை முகாம் நடக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் நடந்தது. இதில் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Tags : eye treatment camp ,
× RELATED கண் சிகிச்சை முகாம்