ஜவுளி கண்காட்சி நிறைவு விழா 3 அமைச்சர்கள் பங்கேற்பு

ஈரோடு, டிச. 1:  ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் ஜவுளி கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டெக்ஸ்வேலி துணைத்தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். தலைவர் லோட்டஸ் பெரியசாமி முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>