நிலக்ேகாட்டை அருகே பரபரப்பு: நத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

நத்தம், டிச. 1: நத்தத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை வகிக்க, மாவட்ட பொறுப்பாளர் அப்துல் அகமது, நகர செயலாளர் சேட் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பழநி பாரூக், துணை தலைவர் முஷ்டாக் பேசினர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நத்தம் பேரூராட்சியில் உள்ள 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவது என்றும், வரும் டிச.6ம் தேதி திண்டுக்கல்லில் நடக்கும் உரிமை மீட்பு போராட்டத்தில் நத்தத்திலிருந்து சென்று கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தமுமுக நகர செயலாளர் அப்துல் ரகீம் நன்றி கூறினார்.

Related Stories:

>