வாலிபர் தற்கொலை

ஈரோடு, டிச. 1:   சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பாட்டப்பன் நகரை சேர்ந்த கந்தசாமி மகன் மெய்யழகன் (27). தொழிலாளி. இவர் கடந்த 19ம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் ஏதோ மனவேதனையில் இருந்த மெய்யழகன் வெள்ளோடு ரவுண்டானா அருகில் விஷம் சாப்பிட்டார். மெய்யழகன் அவரது உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மெய்யழகன் உயிரிழந்தார். இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Plaintiff ,suicide ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து