×

அந்தியூர் அருகே லாரி சென்டர்மீடியனில் மோதி விபத்து

அந்தியூர், டிச. 1:   ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பேப்பர் லோடு ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை, பவானிசாகர் பகுதியை சேர்ந்த டிரைவர் மயில்சாமி (30) ஓட்டினார். கிளீனர் அருகில் அமர்ந்திருந்தார். இதில் நேற்று முன்தினம்  இரவு 9 மணி அளவில் அத்தாணியில் உள்ள கோபி, பவானி, சத்தியமங்கலம் சந்திப்பு சாலை பஸ் ஸ்டாப் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில் மோதியது. இதில், லாரியின் முன்சக்கரங்கள் இரண்டும் முற்றிலும் சேதமானது. டிரைவரும், கிளீனரும் லாரியில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.இது குறித்து ஆப்பகூடல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

 ஆனால் நேற்று முன்தினம் இரவு சென்டர் மீடியனில் மோதிய லாரியை நேற்று காலை 10 மணி வரை அங்கிருந்து அகற்றப்படாததால், அத்தாணி வழியாக சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, கோபி செல்லும் வாகனங்கள் நீண்டநேரம் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் காலை அலுவலக வேலைக்கும், பள்ளிக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் போலீசார், சத்தியமங்கலத்தை சேர்ந்த லாரி உரிமையாளரிடம் பேசி, லாரியை மீட்கும் பணியை துவங்கினர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

Tags : Lorry ,Anthiyur ,
× RELATED கெலமங்கலம் அருகே திருமண கோஷ்டி சென்ற பஸ் லாரி மீது மோதல்:15 பேர் காயம்