உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார்

ஈரோடு, டிச. 1:   உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக இருப்பதாக ஈரோட்டில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 ஈரோடு  கங்காபுரம் டெக்ஸ்வேலி ஜவுளி கண்காட்சியில் கலந்து கொண்ட மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது.  உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது.  ஆனால், உள்ளாட்சி தேர்தலை தடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது  தி.மு.க.தான். எனவே, அவர்கள்தான் கோர்ட்டில் உள்ள வழக்கை திரும்பப்பெற  வேண்டும். தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும்  மின்வெட்டுகளை தவிர்க்க, ஏற்கனவே முன்னெற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  எங்கு மின்தடை ஏற்பட்டாலும் அதனை உடனடியாக சரி செய்ய மின்சார வாரியம்  தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,elections ,
× RELATED உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அதிமுகவினருக்கு வெள்ளிவாள்