×

எரிச்சநத்தம், நடையனேரி கிராம பகுதியில் கல்குவாரி, கிரசர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

விருதுநகர், நவ.29: எரிச்சநத்தம், நடையனேரி கிராம பகுதியில் கல்குவாரி, கிரசர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் எரிச்சநத்தம், நடையனேரி கிராம பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனுவில்,  எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள 6 சர்வே எண்களில் கல்குவாரி மற்றும் கிரசர் அமைக்க தனியார் நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறது. கிராமத்தில் கிராசர் அமைய உள்ள இடத்திற்கு அருகில் பள்ளி, விவசாய விளை நிலங்கள், திருமண மண்டபம், கோவில், அம்பேத்கர் காலனி, மின்வாரிய டவர், புதிதாக துவக்கப்பட உள்ள சுகாதார நிலையம், துணை மின்நிலையங்கள் அமைய உள்ளன.

இந்த அமைவிடங்களுக்கு அருகில் கல்குவாரி, கிராசர் அமைந்தால் பொதுமக்கள், குழந்தைகள், விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். குவாரியில் இருந்து வெடிச்சத்தம், கிரசர் தூசியால் மக்கள் பாதிக்கப்படுவர். மனித உயிர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் கிரசர், கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது. ஏற்கனவே நீதிமன்ற உத்தரவினால் மூடப்பட்ட குவாரியை மீண்டும் திறக்க அனுமதிக்ககூடாது என தெரிவித்துள்ளளனர்.

Tags : protest ,village ,Neriyaneri ,Krasar ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...