×

திருச்சுழி, நரிக்குடி ஊராட்சிகளில் குப்பை கிடங்கு இல்லாததால் ேராட்டில் கொட்டப்படும் அவலம் தீ வைப்பதால் புகைமூட்டம்

திருச்சுழி, நவ.29: திருச்சுழி, நரிக்குடி ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை ஓரிடத்தில் கொட்ட தேவையான அளவு கிடங்குகள் இல்லாததால் ரோட்டோரம் கொட்டப்பட்டு சுகாதாரகேட்டை ஏற்படுத்துகின்றன. தற்போது தேசிய அளவில் தூய்மை இந்தியா திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள், தெருக்கள், கிராமங்கள், நகரங்கள், மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் இத்திட்டம் முழு அளவில் வெற்றிபெற பல விழிப்புணர்வு இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் சுமார் 300க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிகளும் தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டு வீடுதோறும் குப்பை பெறப்படுகிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள தூய்மை காவலர்கள் வீடுதோறும் தினசரி வாங்கும் குப்பையை அந்தந்த பகுதிகளில் சேகரித்து வைக்க போதுமான குப்பை கிடங்குகள் இருப்பதில்லை.

ஒரு கிராமத்திற்கும் மற்றொரு கிராமத்திற்கும் இடையே தூரம் அதிகமாக இருப்பதால் ஒட்டு மொத்தமாக கிடங்குகள் அமைத்து எரிக்கப்பட வாய்ப்புகளும் குறைவு. ஆங்காங்கே சேகரித்து பெறப்படும் குப்பை அந்தந்த கிராம ரோட்டோரம், அரசு புறம்போக்கு இடங்கள், பயன்பாட்டில் இல்லாத தனியார் கிணறுகளிலும் கொட்டுகின்றனர்.  சில இடங்களில் குப்ைபகளை எரிப்பதால் புகை மூட்டம் அதிகமாகி சாலையில் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து மீண்டும் தெரு, ஊருக்குள் வந்து விடுகிறது. மழைநேரங்களில் அவை சகதிக்காடாகி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தொடர்ந்து அக்கிராமங்களில் சுகாதாரக் கேடான நிலையே உள்ளது. அனைத்து கிராமங்களிலும் உரக்கிடங்குகள் போல குப்பைக் கிடங்குகள் அமைத்து தூய்மை நிலையை உருவாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Narikkudy ,
× RELATED திருச்சுழி, நரிக்குடி ஊராட்சிகளில்...