×

அரியலூர் அரசு மாணவியர் விடுதியில் கலெக்டர் ஆய்வு

அரியலூர், நவ. 29: அரியலூர் நகரத்துக்கு உட்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என்று கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் ஒரு அரசு கல்லூரி மாணவர் விடுதி, ஒரு அரசு ஐடிஐ மாணவர் விடுதி, 8 அரசு பள்ளி மாணவர் விடுதி, 6 அரசு பள்ளி மாணவியர் விடுதி என மொத்தம் 16 விடுதிகள் இயங்கி வருகிறது. இதில் 165 கல்லூரி மாணவர்கள், 50 ஐடிஐ மாணவர்கள், 756 பள்ளி மாணவர்கள், 351 மாணவியர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.மேலும் அரியலூர் நகரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் மாணவியர் விடுதியில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா, அடிப்படை வசதிகள் உள்ளதா, உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது என்றார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரளா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Collector ,Inspection ,Ariyalur Government Students Hostel ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...