×

செந்துறை அரசு பள்ளி மாணவிகள் இதய வடிவில் நின்று விழிப்புணர்வு

அரியலூர், நவ. 29: செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கா மாற்றங்களால் வரும் பாதிப்பை தடுக்கும் வகையில் நீர் மேலாண்மை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மாணவிகள் இதய வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவள்ளுவர் கூற்றுபடி பல்லுயிர் பெருக்கத்துக்கு மூலாதாரமாக இருக்கும் நீரை சேமித்து வைக்கவும், நீர் மேலாண்மையில் ஒவ்வொரு தனி மனிதனும் தன் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடந்தது.இந்த உலகம் தன் இயல்பான பணிகளை செய்ய நீர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது, நீரை முறையாக சேமிக்காவிட்டால் கடுமையான வறட்சி, பஞ்சம் ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு, உணவு உற்பத்தி கேள்விக்குறியாகும். குடிக்க நீரின்றி கால்நடைகள் பாதிக்கப்படும் சூழல் வரும். இந்த நிலையை தவிர்க்க வேண்டுமானால் நீரை சேமித்து வைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும்.

ஏரி, குளங்கள், நீர்நிலைகளை பாதுகாத்து வைக்க ஒவ்வொரு தனி மனிதனும் தன்முனைப்பு காட்ட வேண்டும். பருவநிலை மாற்றங்களால் பனிப்பாறை உருகி வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த நீரை சேமித்து வைக்க நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். அத்தகைய நீர்நிலைகளை பல்வேறு மரங்களை வைத்து பராமரிக்க வேண்டுமென மாணவர்கள் விளக்கினர். இதைதொடர்ந்து நீர்நிலைகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். தலைமையாசிரியர் ஆதிரை, நீர்நிலை ஆர்வலர் தங்க.சண்முகசுந்தரம், உதவி தலைமை ஆசிரியை மணிமேகலை, ஆசிரியர்கள் ரேவதி, சத்தியபிரகாஷ் பங்கேற்றனர்.

Tags : Centurion Government School ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது