×

கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் குன்றக்குடிக்கு கண்டுணர்வு பயணம்

கந்தர்வகோட்டை, நவ.29: கந்தர்வகோட்டை வட்டாரத்திலிருந்து மாநிலத்திற்குள்ளான நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டம் விவசாயிகள் கண்டுணர்வு பயணம் வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடிக்கு அழைத்து சென்று வரப்பெற்றது. விவசாயிகள் கண்டுணர்வு பயணத்தில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் டாக்டர்.மாதவன் (பயிர் பாதுகாப்பு), உதவி பேராசிரியர் தேன்மொழி (மனையியல்), உதவி பேராசிரியர் டாக்டர்.அழகப்பன் (மீன்வளத்துறை), உதவி கால்நடை மருத்துவர் ராமமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர் சங்கர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி, பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் திருமேனி ஆகியோர் கலந்து கொண்டனர். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் டாக்டர் மாதவன் (பயிர் பாதுகாப்பு) பேசுகையில், நுண்ணீர் பாசனம் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் பேசினார்.  உதவி பேராசிரியர் தேன்மொழி (மனையியல்) பேசுகையில்,

சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பழக்கூழ், பினாயில் தயாரித்தல் பற்றி கூறினார். உதவி பேராசிரியர் டாக்டர் அழகப்பன் (மீன்வளத்துறை) பேசுகையில், மீன் ரகங்களை பற்றியும், ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு மற்றும் கலப்பு மீன் வளர்ப்பு பற்றி கூறினார். உதவி கால்நடை மருத்துவர் ராமமூர்த்தி பேசுகையில், பறன்மேல் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கிக் கூறினார். முன்னோடி விவசாயிகள் விவசாயிகளின் கருத்துக்களை எடுத்துக் கூறினர். கந்தர்வகோட்டை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் கண்டுணர்வு பயணத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். விவசாயிகள் கண்டுணர்வு பயணத்தில் தொழில்நுட்பக் கருத்துக்கள் வழங்கியவர்களுக்கு வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Kandaragodai Regional Farmers' Cliff ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 93.79 சதவீதம் தேர்ச்சி