×

அறந்தாங்கி அருகே பரபரப்பு கந்தர்வகோட்டை, பொன்னமராவதியில் மக்கள் தொடர்பு முகாம் 242 மனுக்கள் குவிந்தன

கந்தர்வகோட்டை, நவ.29: கந்தர்வகோட்டை அருகே அரவம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 52 மனுக்களும் இதேபோல் பென்னாமாரவதி அருகே நடந்த முகாமில் 190 மனுக்கள் பெறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் மக்கள் குறைகளை தெரிவிக்க அனைத்து கிராமங்களிலும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள அரவம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் தாசில்தார் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக உதவி கணக்கு அலுவலர் (சத்துணவு) சிவக்குமார் கலந்துக் கொண்டார். மேலும் துணை தாசில்தார் செந்தில், வட்ட வழங்கல் அலுவலர் ராஜதுரை, தனி வட்டாட்சியர் சீனிவாசன், ஆர்ஐ லதா, விஏஓ செங்கதிர்செல்வன், ஒன்றிய ஆவின் தலைவர் தம்பித்துரை, பாசறை அருண்பிரசாத், தொழில்நுட்ப அணி புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏற்கனவே மனு கொடுத்திருந்த 21 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையை தாசில்தார் சதீஷ் வழங்கினார். மேலும் மக்கள் தொடர்பு முகாமில் முதியோர் உதவி தொகை கோருதல், ரேஷன்கார்டு கோருதல், வீட்டு மனை பட்டா கோருதல் உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டன.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெசிக்குமார் தலைமை தாங்கினார். திருமயம் எம்எல்ஏ ரகுபதி, பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.3,31,500 மதிப்பிலான உதவித் தொகைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை அடங்கிய 190 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் முகாமில் பல்வேறு துறைஅலுவலர்கள் கலந்து கொண்டு விளக்க உரை வழங்கினர். இதில், பொன்னமராவதி தனி தாசில்தார் சங்கரகாமேஸ்வரன், துணை தாசில்தார் ராஜா, காரையூர் வருவாய் ஆய்வாளர் இளஞ்சியம், கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Parambarama Kandarwagotte ,Aranthangi ,Ponnamaravadi ,
× RELATED அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்