×

தொரவி சிவன் கோயிலில் மூலவர் ஸ்தாபன திருப்பணி விழா

விக்கிரவாண்டி, நவ. 29: விக்கிரவாண்டி  அருகே தொரவி கிராமத்தில் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனுறை கைலாசநாதர்  கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை பழமை மாறாமல் கருங்கற்களால் கட்டும்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மூலவர் பிரதிஷ்டை (ஸ்தாபனம்) செய்யும் திருப்பணிகள் நடந்தது.

இதனை முன்னிட்டு கோயிலிலுள்ள விநாயகர் முருகர் சிவகாமி உடனுறை  நடராஜப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் பிரதிஷ்டை  செய்யப்பட்டு பால், தயிர், தேன், கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.  சிவனடியார்கள் தேவாரம்  மற்றும் திருவாசகம் பாடல்களை தொடர்ந்து பாடினார்.தொடர்ந்து பூவினால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை  சிவனடியார் சரவணன் செய்திருந்தார். இதில் கிராம மக்கள், சிவனடியார்கள் கலந்து  கொண்டனர்.

Tags : Founder ,Toravi Shiva Temple ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயில்.....