×

டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் அறிவுறுத்தல் எரவாஞ்சேரி கீழகாலனிதெருவில் பழுதான மினி குடிநீர் தொட்டி, அடிபம்பை சரி ெசய்ய கோரிக்கை

தரங்கம்பாடி, நவ.29: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் தொட்டியும் பழுதாகி அடி பம்பும் வேலை செய்யாததால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரவாஞ்சேரி ஊராட்சியில் கீழகாலனி தெருவில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்களின் குடிநீர் வசதிக்காக ஒரு மினி குடிநீர் தொட்டியும், ஒரு அடி பம்பும் கடந்த 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அந்த மினி டேங்க் பழுதாகி கிடக்கிறது. கை பம்பும் வேலை செய்யாமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவநிலையில் உள்ளனர். இதுகுறித்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே எரவாஞ்சேரி ஊராட்சி கீழகாலனி தெருவில் பழுதடைந்து கிடக்கும் கை பம்பையும், மினி குடிநீர் தொட்டியையும் சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நாகப்பட்டினத்தில் நீட் தேர்வு 530 மாணவர்கள் எழுதினர்