×

மாநில செயலாளர் தகவல் கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் வெளியூர் மீனவர் குடியிருப்புகளில் அடிப்படை வசதியின்றி அவதி

வேதாரண்யம், நவ.29: கோடியக்கரையில் வெளியூரிலிருந்து தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென அரசு மற்றும் மீன்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடிக்கின்றனர். இவ்வாறு வந்து தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ஊர் சார்பாக தற்காலிக குடிசைகள் அமைத்து கொடுக்கின்றனர். இந்த தற்காலிக குடியிருப்பை சுற்றி கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு வந்து இந்த ஆண்டு தங்கியுள்ள ஆயிரம் மீனவர்களுக்கும் கழிப்பறை வசதி இல்லை. இதனால் திறந்தவெளியில்தான் செல்கின்றனர். இதனால் கடற்கரையில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

 தூய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி கழிவறை இல்லாத கிராமம் இருக்கக்கூடாது என்றும், திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கோடியக்கரையில் வந்து தற்காலிகமாக தங்கியுள்ள மீன
வர்களுக்கு தற்காலிக கழிவறை கூட இல்லாத நிலை உள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு பல தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கோடியக்கரையில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் உப்புத்தன்மை அதிகமாக உள்ளதால் இங்கு உள்ள மக்களுக்கு நாள்தோறும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது கூடுதலாக வெளியூரிலிருந்து வந்து தங்கி மீன்பிடி தொழில் மீனவர்களுக்கு தண்ணீர் பற்றாகுறை உள்ளது. தற்சமயம் உள்ளாட்சி தனி அதிகாரியின் நிர்வாகத்தில் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. இவர்கள் உள்ளூர் மக்களின் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே அரசு மீனவர்கள் நலன் கருதி வெளியூரிலிருந்து வந்து கோடியக்கரையில் தங்கியுள்ள மீனவர்களுக்கு இருப்பிடம், கழிப்பிட வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து உதவ வேண்டுமென மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு வெளியூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : State ,outskirts ,fishery houses ,Kodiyakarai ,facilities ,
× RELATED ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை...