சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியிடம் நிரப்பாததால் மக்கள் அவதி

சூலூர், நவ.29:  சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  பொதுப்பிரிவு மற்றும் திட்டப்பிரிவு ஆகிய பணிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படவில்லை. இதனால் சாதாரண நாட்களிலேயே அலுவலகப் பணிகள் தாமதமாகி வருகின்றது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பணியாளர்கள் இல்லாததால்  தேர்தல் பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தொகுதி வரையரைகள், வார்டு மாற்றங்கள் தொடர்பாக தற்போது தினந்தோறும் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் விபரங்கள்  தெரிந்து கொள்வது தொடர்பாக வரும்போது தக்க தகவல்களைத் தர போதிய அலுவலர்கள் இல்லை. இதனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளில் முழுமையாக பணிசெய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், பணியில் இருக்கும் அலுவலர்களில் 5க்கும் மேற்பட்டோர் நீண்ட நாள் விடுப்பில் உள்ளதாகவும் அதனால் இருக்கும் பணியாளர்கள் பெரும் மன அழுத்தத்தில் இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பணி செய்ய முடியாது என ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : office ,Sulur Panchayat Union ,
× RELATED மக்கள் நீதி மய்யம் புதிய அலுவலகம்...