×

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில்

நாகர்கோவில், நவ.29: கன்னியாகுமரி  சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.  இந்த சாலைகளை மேம்பாடு செய்வதற்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி  ஒதுக்கீடு செய்து தர கேட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் பேரூராட்சி  இயக்குனருக்கும் ஊரக வளர்ச்சிதுறை இயக்குனர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட  திட்ட இயக்குனருக்கும் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட  பேரூராட்சி இயக்குனர்  மூலமாகவும் மாவட்ட திட்ட இயக்குனர்  மூலமாகவும்  சுமார் 12 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டிற்காக  அரசிற்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. தற்போது 7 கிராமப்புற சாலைகள் மேம்பாடு  செய்வதற்கு ₹ 1.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுபோல்  எம்என்ஆர்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் தோவாளை ஊராட்சியில் 3 சாலைகள் மேம்பாடு  செய்வதற்கு ₹ 11.37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம்  ஒன்றியத்தில் எம்என்ஆர்ஜிஎஸ் திட்டத்தின் கீழ் 4 சாலைகளில் அலங்கார தரை ஓடு  பதிக்க ₹ 17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.அகஸ்தீஸ்வரம் ஒன்றியம்  கோவளம் ஊராட்சி சுனாமி காலனியில் சாலை அமைக்க ₹ 45 லட்சம், கரும்பாட்டூர்  ஊராட்சி கரும்பாட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து கீழமணக்குடி செல்லும்  சாலை அமைக்க ₹ 20 லட்சம், ரவிபுதூர் காலனி சாலை அமைக்க ₹ 14 லட்சம்,  தோவாளை ஒன்றியம் திருப்பதிசாரம் ஊராட்சி தெற்கு திருப்பதிசாரம் பாலத்தில்  இருந்து சண்முகபுரம் செல்லும் சாலை அமைக்க ₹ 23.37 லட்சம் உள்பட புதிய  சாலை அமைப்பது, அலங்கார ஓடு பதிப்பது என பல்வேறு பணிகள் என மொத்தம் ₹ 3  கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் விரைவில்  தொடங்கப்படும் என ஆஸ்டின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.


Tags : Kanyakumari Assembly ,constituency ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...