×

மாவட்டத்தில் 3வது நாளாக சாரல் மழை, கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

ஊட்டி, நவ. 29: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் கடும் குளிர் நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மேக மூட்டமும் அவ்வப்போது கன மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சில நாட்கள் வெயில் அடித்தது. ஆனால், மீண்டும் காலநிலையில், மாற்றம் ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக மீண்டும் எந்நேரமும் மேக மூட்டம், சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மோசமான காலநிலையால் மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எந்நேரமும் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது.   இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அனைவரும் வெம்மை ஆடைகளை அணிந்தபடியே வலம் வருகின்றனர். நேற்றும் பகலில் சாரல் மழை காணப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தினறினர்.  மேலும், பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே இயக்கினர்.ஊட்டியில் தொடர்ந்து மூன்று நாட்களாக மேக மூட்டம் நிலவுகிறது. சாரல் மழையும் பெய்து வரும் நிலையில், ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 16 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 8 டிகிரி செல்சியசுமாக வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதனால், குளிர் மிகவும் அதிகமாக காணப்பட்டது. தேயிலை தோட்டங்கள், மலை காய்கறிகள் பறிக்க  செல்லும் தொழிலாளர்கள் குளிரால் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதேபோல், பள்ளிக்கு  செல்லும் சிறு குழந்தைகளும் குளிரை தாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags : public ,district ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...