கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு டிச. 2ம் தேதி துவக்கம்

ஊட்டி, நவ.29: கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை சாண்டிநல்லாவில் நடக்கிறது. மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் வாசு நாயர் பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நீலகிரி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஊட்டியில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கான 544 நபர்களுக்கு உடற் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இப்பதவிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் அனைத்து ஆவணங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு வாசுநாயர் பிரேம்குமார் கூறியுள்ளார்.

Related Stories:

>