×

குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து கட்டியுள்ள 27 வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

குன்னூர்,நவ.29: குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஓடையை ஆக்கிரமித்து கட்டிய 27 வீடுகளுக்கு காலி செய்ய வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த 17ம் தேதி பெய்த பலத்த மழையில் 24 வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் தரைப்பாலம் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்தன. தொடர்ந்து இரண்டாவது முறையாக இது போன்ற பாதிப்பு ஏற்பட்டதால் வருவாய்த்துறையினர் சேதமடைந்த பகுதியில் அளவீடு செய்தனர். அதில் 27 வீடுகள் ஓடையை ஆக்கிரமித்து குடியிருப்பு கட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேற்று அந்த 27 வீடுகளையும் காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், அப்பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.  இது ெதாடர்பாக அப்பகுதி மக்கள்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், இந்த பகுதியில நாங்கள் காலம் காலமாக வசிக்கின்றோம், முறையாக ஓடையை தூர்வாரி பாலங்களை உயரமாக கட்டினால் இனி வரும் காலங்களில் இது போன்று பாதிப்புகள் ஏற்படாது. எனவே ஓடையை சீரமைத்து தாங்கள் இதே பகுதியில் வசிக்க ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : houses ,area ,Kannur Krishnapuram ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்