6 வட்டங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்

ஊட்டி, நவ.29: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் சிறப்பு இன்று 29ம் தேதி திட்ட முகாம் நடக்கிறது. இதன்படி ஊட்டி வட்டத்திற்குட்பட்ட நஞ்சநாடு-2, குருத்துக்குளி சமுதாய கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் உலிக்கல்-1, மேல்பாரதிநகர் சமுதாய கூடத்திலும், கோத்தகிாி வட்டத்தில் கொணவக்கரை-1, பர்ன்சைடு சமுதாயக் கூடத்திலும் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. குந்தா வட்டத்திற்குட்பட்ட பாலகொலா-1, முதுகுளா சமுதாய கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் பாடந்தொரை-1, புழுக்கொல்லி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும், பந்தலூர் வட்டத்தில் சேரங்கோடு-1, கொளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலும் முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் தங்களது கோாிக்கை மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.

Tags : project camp ,
× RELATED 6 வட்டங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்