ஊத்துக்குளியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர் கைது

திருப்பூர், நவ.29:திருப்பூர் ஊத்துக்குளியின் மனைவின் கழுத்தை அறுத்துக்கொன்றவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வசிப்பவர் நிசார் அகமது (37). இவரின் இரண்டாவது மனைவி ஹசீனா (21). இவர்களுக்கு அரபாத் (2) எனும் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிசார் அகமதுவுக்கு குடிப்பழக்கம் இருந்ததுள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி நிசார் அகமது குடித்து விட்டு வந்ததால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஹசீனா தனது கனவர் நிசார் அகமதுவிடம் கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் நிசார் அகமது வீட்டில் இருந்த கத்தியால் ஹசினாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் அதே கத்தியால் கழுத்து பகுதியில் அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் ஊத்துக்குளி போலீசார் விரைந்து வந்து ஹசீனாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கும், தற்கொலைக்கு முயன்ற நிசார் அகமதுவை சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிசார் அகமதுவுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தனர். இந்நிலையில் நிசார் அகமதுவின் உடல்நிலை தேறிய நிலையில் நேற்றுமுன்தினம் அவரை கைது செய்து அவிநாசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Tags : death ,
× RELATED கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்றவருக்கு அடிஉதை