×

வீட்டில் கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது

திருப்பூர், நவ.29:திருப்பூர் மாநகரில் கஞ்சா விற்பனையை குறைக்கும் வகையில் கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த நடத்திய விசாரணையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த அன்னக்கொடி (39) மற்றும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பெரியாண்டவர் (எ) ஆண்டவர் (23) என்பதும், அவர்கள் கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து வீடு ஒன்றில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததது தெரியவந்தது. பின்னர் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அந்த சோதனையில் 2 மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED மணல் கடத்திய 2 பேர் கைது