×

சைனிக் பள்ளியில் மகிழ்வு ஓட்டம்

உடுமலை,  நவ. 29: நல்ல உடல் நலம் மற்றும் மனநலம் பெற்று வாழ்வின் சவால்களை  எதிர்கொள்ள உடற்பயிற்சி மற்றும் விளையாடுவது அவசியம் என்ற கருத்தை  வலியுறுத்தி அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மகிழ்வு ஓட்டம் நடந்தது.  மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 5 கி.மீ. தூரம் ஓடினர். நிகழ்ச்சியில்  பள்ளியின் நிர்வாக அலுவலர் மற்றும் பொறுப்பு முதல்வர் அமித்குர்குரே  கொடியசைத்து துவக்கி வைத்தார்.கிலோ ரூ.150 வரை விற்பனைகாங்கயத்தில்  வியாழக்கிழமை தோறும் காய்கறிக்கென தனியாக  மார்கெட்டும்  கூடுகிறது.இங்கு காங்கயம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்குதியில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிர் செய்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். மேலும் வெளியூரை சேர்ந்த வியாபாரிகளும்  வெங்காயம்,தக்காளி போன்றவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். நேற்றைய மார்க்கெட்டில் நல்ல தரமான வெங்காயம் மிக குறைவாகவே   விற்பனைக்கு வந்தது. ஒரு  கிலோ சின்ன வெங்காயம் ரூ.150 வரை விற்பனையானது. அதேபோல நல்ல தரமான பெரிய வெங்காயம் கிலோ ரூ.100 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் நல்ல தரமான வெங்காயம் சிறிது நேரத்திலேயே காலியாகி விட்டது.அதன் பிறகு 2ம் தரம் மற்றும் 3ம் தரமான  வெங்காயமே  பெரும்பாலும் விற்பனை செய்யப்பட்டது.கிலோ ரூ.120 வரை  சின்ன வெங்காயமும், கிலோ ரூ.80வரை  பெரிய வெங்காயமும் விற்பனை செய்யப்பட்டது.

Tags : Sainik School ,
× RELATED கடற்படை புதிய தளபதியாக தினேஷ் குமார் பதவியேற்பு