மண் கடத்திய 3 வாகனங்கள் பறிமுதல்

பொங்கலூர்,நவ.29:திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் திருட்டில் ஈடுபடுவதாகவும் லாரிகள் மூலம் அவற்றை வெளியிடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாகவும் பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடத்திலுள்ள செக்போஸ்ட், காரணம்பேட்டை, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய சாலைகளில் தாசில்தார் சிவசுப்பிரமணியம் தலைமையில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு டிப்பர் லாரி, பொக்லைன், டிராக்டர் மூன்று வாகனங்களில் ஆய்வு செய்தனர். இதில் சட்டவிரோதமாக மண் திருடி விற்பனை கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>