ஆம்னி பஸ், லாரி மோதல்

உடுமலை,நவ.29:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.  நேற்று அதிகாலை 5.30 மணியளவில், உடுமலை- பொள்ளாச்சி சாலையில், ராகல்பாவி பிரிவு அருகே வந்தபோது, எதிரே பொள்ளாச்சியில் இருந்து உடுமலைக்கு மக்காச்சோளம் ஏற்றிவந்த லாரியும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதின.இதில் பேருந்தில் பயணித்த காரைக்குடியை சேர்ந்த பழனியப்பன்(41), கமலா ராணி (52), பொள்ளாச்சியை சேர்ந்த லாரி டிரைவர் லோகநாதன்(39), செந்தில்குமார்(55), கோவையை சேர்ந்த கருப்பையா (28), ராஜேஷ்(29), மாலதி(30), ராமநாதபுரத்தை சேர்ந்த யோகேஸ்வரன்(52), ஆம்னி பேருந்து டிரைவர் ரத்தினவேல் பாண்டியன்(25) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்து சென்ற உடுமலை எஸ்ஐ. ரவி, வழக்குப்பதிந்து, காயமடைந்தவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.

Related Stories:

>