×

ஆத்தூர் பகுதியில் தூர் வாராததால் தொடர் மழையிலும் வறண்டு கிடக்கும் சிற்றோடைகள்

ஆத்தூர், நவ.28: ஆத்தூர் பகுதியில் சிற்றோடைகளை தூர் வாராததால் தொடர் மழை பெய்தும் நீர்வரத்தின்றி வறண்டு போய் காணப்படுவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம், சிவகங்கைபுரம் உள்ளிட்ட கிராமங்கள் கல்வராயன் மலையை ஒட்டி அமைத்துள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியிலும், கல்வராயன் மலைப்பகுதிகளிலும் போதிய மழையில்லாததால் இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பருவமழை வெப்ப சலனத்தால் மழை என இந்த பகுதி முழுதும் வெளுத்து வாங்கியுள்ளது. மேலும், கல்வராயன் மலைப்பகுதியிலும் மழை பெய்துள்ளது. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுக்கு மேலாக வறண்டு கிடந்த இந்த பகுதியில் தற்போது விவசாயம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.  இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள சிற்றோடைகளில் போதிய அளவு தூர்வாராமல் இருப்பதால் கல்வராயன் மலைப்பகுதியிலிருந்து வரும் தண்ணீர் அதிகளவு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதியில் உள்ள தடுப்பணைகளுக்கு அதிக தண்ணீர் இல்லாத நிலையும், வேளாண் கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயராத நிலையும் காணப்படுகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள சிற்றோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூவாரிட பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : streams ,season ,region ,Athur ,
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...