×

ஏஆர்ஆர்எஸ் அகாடமி பள்ளியில் மாணவர்களுக்கான டேலண்ட் ஷோ

சேலம், நவ.28: சேலம் வலசையூரில் இயங்கி வரும் ஏஆர்ஆர்எஸ் அகாடமி பள்ளியில் ஏஆர்ஆர்எஸ் டேலண்ட் ஷோ என்ற தலைப்பில் திறமைசாலிகளுக்கான போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு பள்ளியின் தாளாளர் சுமித்ராதேவி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சிவராமன், பள்ளியின் முதல்வர் அஷ்டலட்சுமி துவ்ககி வைத்தனர். இப்போட்டியில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓவியம் வழியாகவும், ஆடை அலங்கார முறைகள் மூலமாகவும், கதை கூறுதல் தன்னைப் பற்றி பிறர் முன்பு பேசுதல் நியூஸ் பேப்பர், அட்வர்டைஸ்மெண்ட், பவுச்சர், போஸ்டர் மேக்கிங் மற்றும் ஸ்பெல் பீ போன்ற பல வழிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சுமித்ராதேவி ரவிச்சந்திரன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்

Tags : ARRS Academy School ,
× RELATED எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்