×

மீனாட்சியம்மன் கண்மாய் கரை உடையும் அபாயம் போடி அருகே மக்கள் பீதி

போடி, நவ. 28: போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய் கரையில் 100 அடி வரை கீறல் விழுந்துள்ளதால்  கரை உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். போடி  அருகே போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகினறனர். இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு பாசனநீர் பெறுவதற்காகவும்,  குடிநீர் தேவைக்காகவும் 150 ஆண்டுகளுக்கு முன்பாக 100 ஏக்கர் சுற்றளவில் மீனாட்சியம்மன் கண்மாய் உருவாக்கப்பட்டது. மழைக்காலங்களில்  கொட்டகுடி ஆறு வெள்ளத்தில் நிறைந்து 6 மாதம் வரையில் தேங்குவதால் நிலத்தடி நீர் ஊற்றெடுத்து சுமார் 6 ஆயிரம் ஏக்கரளவில் ஒரு போகம்

நெல் சாகுபடியும் மற்ற விவசாயமும் நடந்து வருகிறது. இந்நிலையில் மீனாட்சிபுரம் - விசுவாசபுரம் சாலையில் மீனாட்சியம்மன் கண்மாய் நீண்ட கரையும் ஒன்றாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. தற்போது கண்மாயில் தண்ணீர் நிரம்பி திறந்து விடாமலேயே ஷட்டர் வழியாக மறுகால் பாய்ந்து வருகிறது. விசுவாசபுரம் சாலையில் கண்மாய் கரையும் சேர்ந்துள்ளதால், 100 அடி வரை நீளமாக கீறல் விழுந்துள்ளதால் கரை உடைந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் விவசாய, பஸ், லாரி போன்ற வாகனங்களும் இப்பகுதியை கடந்து வருவதால் அதிர்வுகளால்  கீறல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, இதற்கிடையில் கனரக வாகனங்களும் அதிகப்பயணிகளை ஏற்றி வரும் பஸ்களும் இவ்வழியே செல்லும் போது ஏற்படும் அழுத்தத்தால் கரை உடைந்து விடும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுப்பணித்துறையினரை பார்வையிட்டு கண்மாய் கரையை உடைப்பை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செய்திட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Meenakshiman ,
× RELATED மீனாட்சியம்மன் கோயிலில் காணிக்கை ரூ.96 லட்சம்