×

உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுரை, நவ.28: உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை விராட்டிபத்து மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி 22வது வார்டு விராட்டிபத்து பகுதியில் 10ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு குடிநீருக்கான ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் பம்பிங் ஸ்டேசன் உள்ளது.  தற்போது இந்த இடத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கான கட்டுமானப்பணி நடந்து வருகிறது.

இந்த பணியை நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் இயற்கை ஆர்வலர் ராேஜஸ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘‘இங்கு பொதுமக்கள் வழிபடும் கோயில் உள்ளது. குப்பை கிடங்கு அமைப்பதால் குடிநீருக்காக மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீர் மாசுபட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். சுகாதாரக்கேடு ஏற்படும். எனவே உரக்கிடங்கிற்கான குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என்றனர்.

Tags : Civilians ,opposition corporation officials ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை