டெய்லரை பீர் பாட்டிலால் தாக்கிய 3 பேர் கைது

திருப்பூர், நவ. 28:  திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சிவா என்கிற பரமசிவம் (33). இவர் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருப்பூர் பி.என். ரோடு திருமலை நகரை சேர்ந்த முகமது ஹக்கீம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமசிவம் எம்.எஸ். நகரிலுள்ள டாஸ்மாக் பார் அருகே சென்றார். அப்போது, அங்கு வந்த முகமது ஹக்கீம் (36) மற்றும் அவரது நண்பர்களான தவுபீக் அக்ரம் (29), மங்கலத்தை சேர்ந்த அஜ்மீர் காஜா (31) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த 3 பேரும் சேர்ந்து பரமசிவத்தின் தலையில் பீர்பாட்டிலால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரமசிவத்தை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Related Stories:

More