11 கிராமங்களில் சிறப்பு குறைதீர் முகாம்

திருச்சி, நவ.28: மாவட்டத்தில் வருவாய்த்துறை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.திருச்சி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு கிராமம் தேர்வு செய்து அங்கு சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகள், பிரச்னைகளுக்கு பொதுமக்களுக்கு தீர்வு வழங்கப்படும். அதன்படி நாளை (29ம் தேதி) வருவாய் சிறப்பு முகாம் நடக்கும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கு தாலுகாவில் உக்கடை அரியமங்கலம், திருச்சி மேற்கில் உய்யக்கொண்டான் திருமலை, திருவெறும்பூர் கீழமுல்லக்குடி, ரங்கம் கிளிக்கூடு, மணப்பாறை கண்ணுடையான்பட்டி, மருங்காபுரி ஊத்துக்குளி, லால்குடி நஞ்சை சங்கேந்தி, மண்ணச்சநல்லூர் கூத்தூர், முசிறி கரட்டாம்பட்டி, துறையூர் வி.ஏ.சமுத்திரம், தொட்டியம் ஏலூர்ப்பட்டி ஆகிய இடங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது.

Related Stories:

>