×

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தொடர்ந்து வெண்புழு தாக்குதலால் விவசாயிகள் வேதனை

பெரம்பலூர்,நவ.28: மக்காச்சோளம் தமிழக த்தில் அதிகம் விளையும் பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலை எதிர்த்துப் போராடும் சூழலில் வெண்புழு தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரிப் பயிரான மக் காச்சோளம் பெருமளவு சாகுபடி செய்யப் படுகிறது. குறிப்பாக ஆண்டுக்கு 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுவதால் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட் டம் மக்காச் சோள சாகுபடியில் முதலிடம் வகி த்து வருவது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக கடந்த 2018-2019ம் ஆண்டு மட்டும் பெர ம்பலூர் மாவட்டத்தில் 64 ஆயிரம் எக்டேர் பரப்பள வில் அதாவது 1,58,080 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. இதில் யார்கண் பட்டதோ தெரியவில்லை. அமெரிக்க படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்களை சாகுபடி செய்த 95சதவீத விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையொட்டி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக இழப்பீடு வழங்கக்கோரி பல்வேறு முறை போராட்டங்கள் நடத்தப்பட்டன.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பாதிக்கப்பட்ட 10ஆயிரம் விவசாயிகளின் மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டன. அதேபோல் அனை த்து அரசியல் கட்சியினரும் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு இழப்பீடு வழங்கிடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப் பின. இதன் எதிரொலியாக தமிழக அரசு உத்த ரவின் பேரில் வேளாண்மைத்து றை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறை ஆகிய 3து றை களின் சார்பாகக் கூட் டாய்வு நடத்தி மேற்கொ ண்ட கணக்கெடுப்பு மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு பாதிக்கப் பட்ட 65ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்காச் சோள விவசாயிகளுக்கு ரூ32கோடிக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப் பட்டது.

இருந்தும் மானாவாரி நில த்தில் வேறுவழி தெரியாம ல் விவசாயிகள் நடப்பு 2019 -2020ம் ஆண்டுக்கும் 57ஆ யிரம் எக்டேர் பரப்பளவில், அதாவது 1,40,790ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் 3 தலைமுறையாக டேரா போ ட்டு தங்கிக் கொண்டு தாக் குதல் நடத்தும் படைப்புழு தாக்குதல் 2ம் ஆண்டாக நடப்பாண்டும் காணப்படுவதால் அதிகப்படியான விவசாயிகள் அச்சமடைந் திருந்தனர். இதற்காக தமிழக அரசின் வேளாண்மை த்துறையும், கோவையிலு ள்ள தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக் கழகமும் சென்னையிலுள்ள அண் ணா பல்கலைக் கழகத்து டன் இணைந்து ஆளில்லா குட்டி விமானங்களான ட்ரோன்கள் மூலம் பெரும்ப குதி மக்காச்சோள வயல் களை ஒரே சமயத்தில் படைப் புழுக்களை தாக்கி அழித்திடத் திட்டமிட்டுள் ளது. மேலும் விவசாயிகள் தாங்களாகவே மருந்துகளைத் தெளித்துக்கொள்ள ஏதுவாக ஒன்றியங்கள் வாரியாக வேளாண்மைத் துறை மூலம் நிதிஒதுக்கி, மருந்துதெளிப்பான்களை வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் மத்தலத்தி ற்கு இரண்டு பக்கமும் தாக்குதல் ஏற்படுவதுபோல், மக்காச்சோளத்திற்கு 2வது ஆண்டாகக் காணப்படும் படைப் புழு தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பெர ம்பலூர் மாவட்ட மக்காச் சோள விவசாயிகள் திண் டாடி வரும் சூழலில் தற் போது வெண்புழு தாக்கு தல் மக்காச்சோளப் பயிர்க ளை வேர்களில் இருந்து தாக்கி அழித்துவருவது வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் வேதனையிலும் வேதனையை அளித்து வருகிறது.

Tags : vertigo attack ,plague ,
× RELATED கொரோனாவை தொடர்ந்து மீண்டும் ஒரு...