×

மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் ஆவுடையார்கோவில் அருகே மாணவர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கல்

அறந்தாங்கி, நவ.28: ஆவுடையார்கோவில் அருகே மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆவுடையார் கோவிலை அடுத்த மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டிணம் கிராமத்தில் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அல் அமீன் தலைவர் கலந்தர் பாட்சா தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் மனோகரன் முன்னிலை வகித்தார். தமுமுக மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான் பள்ளி குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். நிகழ்ச்சி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Oudayarikovil ,
× RELATED ஆவுடையார்கோவிலில் கோடையிலும்...